விலைரூ.75
புத்தகங்கள்
Rating
சேகர் பதிப்பகம். 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 148)
மகளிர் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றும் மகேஸ்வரியின் இலக்கிய ஆய்வு இந்த நூல். புறநானூறு தொடர்பான நான்கு கட்டுரைகளோடு வேறு சில கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், ஆய்வு நோக்கில் படைக்கப்பட்டுள்ளது. போரும், கொடையும் பண்டைத்தமிழ் வேந்தர்களின் சிறந்த பண்புகள் என்பதனை இந்த நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்கிறது. சங்க காலத்தில் புலவர்கள் எவ்வாறு செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை எளிய நடையில் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். மன்னனுக்குத் தக்க நேரத்தில் தகுந்த அறிவுரைகளை எடுத்துக் கூறும் உயர்ந்த இடத்தில் அக்காலப் புலவர்கள் இருந்தனர் என்பதை அறியத் தருகிறது இந்த நூல். பண்டைத் தமிழ் மன்னர்கள், புலவர்கள், மக்கள் வாழ்க்கை முதலியவற்றை அறிந்து கொள்வதற்கு இந்த நூல் அடிப்படை வகுத்துத் தந்துள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!