விலைரூ.80
புத்தகங்கள்
Rating
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160 ).
புதிதாக ஒருவர் பணியில் அமர்வதற்கும், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கும் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கும் இண்டர்வியூ முக்கியம்.
நேர்முகத் தேர்வுகளின்போது, தேர்வாளருக்கும் போட்டியில் பங்கேற்பவருக்குமான இத்தகைய உரையாடல்கள் அனுமானமாகவோ (அ) வியப்பாகவோ இருக்கலாம். அதில் ஒன்று.
தே: டிரைவர் வேலைக்கான லைசென்சும், 10ம் வகுப்பு படித்த சான்றிதழும் ஓ.கே... ஆனால், உங்களுக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் இருவரிடமிருந்து நன்னடத்தை சர்டிபிகேட் தேவைப்படுகிறதே?
போ: ""சார்... நாட்டிலே நடக்கிற கூத்து உங்களுக்குத் தெரியாதா என்ன? அஞ்சு - பத்துன்னு "பெரிய நோட்டு கேக்கறாங்க... எதுக்குங்க இவ்வளவுன்னு கேட்டால், கட்சி நிதிக்குன்னு சொல்றாங்க...
இவ்வாறு முரண்பாடாகவும், முறை தவறியவாறும் பதிலளித்த போட்டியாளர்களின் மனநிலையைக் கண்டு
பச்சாதாபப்பட வேண்டும். இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களுடன் தன் விவரக் குறிப்பு (பயோ-டேடா) தயாரிப்பதிலிருந்து, இண்டர்வியூ நடைபெறுவதற்கு முன்னரும், அதே தினத்திலும் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள், மாதிரி (சாம்பிள்) வினா - விடை - உரையாடல்கள், பயிற்சிக் குறிப்புகள் யாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!