விலைரூ.95
புத்தகங்கள்
Rating
1972ல் நெல்லின் மரணம் சிறுகதை மூலம் தீபம் வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவரின் சிறுகதை தொகுதி. ஆசிரியரின் 25 சிறந்த சிறுகதைகள் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
கணையாழி, இன்று, ஞானரதம், வண்ணங்கள், சுதேசமித்திரன் தீபாவளி மலர், சோதனை, பிரக்ஞை, சதங்கை, காலச்சுவடு, விருட்சம், கவிதாசரண், சமவெளி, யுகமாயினி ஆகிய இதழ்களில் வெளியான கதைகள் என்பதால் கதையின் தரத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
பள்ளி மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை இலக்கியம் என்பது எதுவென இதுதான் என 40 ஆண்டு காலப் படிப்பு அனுபவமும், படைப்பு அனுபவமும் என்னை ஊடாடாமல் நிலை நிறுத்தியிருக்கின்றன. ஒரு எழுத்து மரபும், படைப்புலகமும், இங்கே தமிழில் மணிக்கொடி காலத்திலிருந்து தொடர்கிறது.
நவீன தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வரிசையில் பாரவியாகிய என்னையும் ஒரு துளியாக இணைத்துக் கொண்டுள்ளேன் என்று தன் தொகுதி பற்றிக் கூறுகிறார். கம்பன் வீட்டு கட்டுத் தறி கதை எழுதுவதில் என்ன ஆச்சரியம். ஆம். இவர் அகிலனின் மருமகன் ஆயிற்றே. அட்டைப்படம் கண்ணுக்கு இதம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!