விலைரூ.85
புத்தகங்கள்
புதிய நோக்கில் நாட்டுப்புறவியல்
விலைரூ.85
ஆசிரியர் : மகேஸ்வரி
வெளியீடு: திருக்குறள் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78. (பக்கம்: 168)
நாட்டுப்புறவியல் தொடர்பான எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந் நூல். பழமொழிகளை இத்தனை வகையாக வகைப்படுத்தலாம் என, நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு வகைப்படுத்தி ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர். பண்டைத் தமிழரின் நம்பிக்கைகள் ஏதேனும் காரணத்தினைக் கொண்டிருக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார். நரி குறுக்கே வந்தால், நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால், கெட்ட சகுனம். முதலாகப் பல்வேறு நம்பிக்கைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.தற்காலத்தில் ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே, அனைவராலும் விளையாடபடு கின்றன. ஆனால், பழங்காலத்தில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டிருக்கின்றன. அந்தப் பழமையான விளையாட்டுகளை எல்லாம் தொகுத்துத் தந்துள்ளதுடன், நாட்டுப் புற மருத்துவ முறைகளையும் திரட்டி தந்துள்ள தன்மை பாராட்டிற்குரியது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!