விலைரூ.40
புத்தகங்கள்
Rating
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், குமர குருபரர் குறித்து சாந்தி குமார சுவாமிகள் எழுதியுள்ள இப்புத்தகம், குமர குருபரரின் வாழ்க்கை, ஆன்மிகப் பணி, பக்தி இலக்கியப் படைப்புக்கள் பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த குருபரரின் சேவை காசி மாநகர் வரை விரிந்து வியாபித்திருந்தது என்ற தகவலும், தமிழ் கடந்து பிறமொழிகளிலும் புலமை பெற்று, சிறந்த கவிஞர் என்று தகவலும் நன்கு எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. குமரகுருபரரின் நான்மணிமாலையும், நீதிநெறி விளக்கமும் தமிழர்களுக்கு கிடைத்த அருட்கொடை. சாந்திகுமார சுவாமிகள் மிகச்சிறப்பாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!