விலைரூ.95
புத்தகங்கள்
Rating
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 260)
காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன் ஏற்படும் எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும், பதட்டமும் வருவது இயல்பு.
இந்த பயத்தையும், பதட்டத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து விடுபடவும், தெளிவு பெறவும் உதவும் வகையில் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பல வழிமுறைகளை கூறியுள்ளார் மூல ஆசிரியர் விஜய் நாகஸ்வாமி.
நூலாசிரியர், மனநல மருத்துவராகவும் இருப்பதால், தன்னிடம் ஆலோசனைக்காக வரும் ஜோடிகளின் பிரச்னைகளையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் இந்நூலில் ஆங்காங்கு விவரித்துள்ளார்.
பிரச்னையில்லாத மண வாழ்க்கை ஏது? பிரச்னையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ இந்நூல் வழிகாட்டுகிறது. ஒவ்வொருவரும் படித்து அறிய வேண்டிய நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!