மிகவும் கனமான புத்தகம் இது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பதினெட்டு விரிவான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர் அன்றி கொங்கு மன்னர்களும் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி தொண்டை மண்டலம் எனப்படுவது போல் மேற்கு பகுதி கொங்கு மண்டலம் எனப்பட்டது. அதனில் தென் கொங்கு எனப்படுவது பொள்ளாச்சி, பல்லடம், உடுமலை, தாராபுரம், பழநியின் மேற்கு பகுதி என்பவற்றை உள்ளடக்கியது.
இந்தப் பகுதியில் வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள் வழியாக கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, திருக்கோவில்கள் ஆகியன பற்றிய தகவல்கள் நிரம்பிய நூல்.- கவிக்கோ ஞானச்செல்வன்.