கடந்த 30 ஆண்டுகளாகப் புராணம் பிரசங்கம் செய்து வருபவர் படைத்த நூல் என்பதால், நூலின் சிறப்பைப் பற்றி சிறப்பாக தான் கூற முடியும்.
கருணீகர் சமுதாயத்திற்கே தலைவர் சித்ரகுப்தன். அதர்மத்தையும், தர்மத்தையும் சமமாக நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, இறுதியில் தர்மம் தழைக்க வழி செய்கிறார் சித்ரகுப்தன் என்பது உறுதி.
அவ்வை நடராஜன் நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் சித்குப்தர் சிறப்பு, வரலாறு, தவம், திருமணம், நோன்பு, அஷ்டோத்திர சதநாமங்கள், தல வரலாறு, கோவில் திருவிழாக்கள் என, அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார். ஒவ்வொருவரும் படித்த அறிந்து கொள்ள வேண்டிய நூல்.