இரு வைணவ உட்பிரிவுகளை சார்ந்த (வடகலை, தென்கலை) மகா பண்டிதர்களில் ஒருவரான, அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாசாரியார் "இந்து மதம் எங்கே போகிறது எனும் தலைப்பில் சிலகாலம் முன்பு "நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரை எழுதி, அதற்கு ஆன்மிக மாத இதழில் வெளியான தொடர் மறுப்பு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
ஒருவர் மீது மற்றவர் நடுத்தெருவில் பட்டப்பகலில் சேற்றை அல்ல... சாணத்தை எறிந்து விளையாடியதையொத்த வைணவப் பெருமக்களையும் தலைகுனியச் செய்யும் படைப்பு. தன்னை விட வயதில் மூத்தவரான தாதாசாரியாரை "கடைந்தெடுத்த நயவஞ்சகர் நாத்திகர்களுக்கு துணை போன பச்சை துரோகி என்றெல்லாம் மனம் போன போக்கில் வசை.இந்நூலாசிரியரின் கசையடிக்கு இரையானவர்களின் நீண்ட பட்டியலில் கட்டுரை வெளியீட்டாளர்களான "நக்கீரன் ஆசிரியர் குழு, அகோபில மடம், ராமானுஜரின் முக்கிய சீடரான ஸ்ரீவேதாந்த தேசிகர், கவுதமபுத்தர், போன்றோர் உள்ளனர்.
வேத, வேதாந்தங்களை அறிந்தவர் என்ற பெயரில் இஷ்டப்படி எழுதியிருப்பது மிகவும் மோசமானது. கற்றறிந்தோர் இந்நூலை புறந்தள்ளுவது நிச்சயம். - ராமன் முத்துஸ்வாமி