பழனி தெண்டபாணி கட்டளைக் கலித்துறை, மயிலை முருகன் அந்தாதி, மயிலமலை பிள்ளைத்தமிழ் என்று இலக்கணப் பாடல்கள் 355 உள்ள நூல். 125 ஆண்டுகளுக்கு முன் தன் கொள்ளுத் தாத்தா இயற்றிய தெய்வீகப் பாடலை குடும்ப சொத்துரிமை என்று கருதாமல், இறைத்தமிழ் காணிக்கை என்று கருதி வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். கட்டளை கலியில் முருகனை புகழும் வகையில் உள்ள, இந்நூல் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் போற்றப்படும். இப்பாடல்களுக்கு உரையும் உள்ளது மற்றொரு சிறப்பாகும்.