விலைரூ.100
புத்தகங்கள்
Rating
திருமுடி பதிப்பகம், 40, கிழக்குச் சன்னிதி தெரு, வில்லியனூர், புதுச்சேரி -605 110. (பக்கம்: 168 ).
வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் துணைபுரிவன கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள், புதை பொருட்கள் முதலியன. அகழ்வாராய்ச்சிகள் மூலம் வரலாற்றுச் சின்னங்கள் பல கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தமிழ்நாடு - புதுச்சேரி வரலாற்றுக்குத் துணை புரிகிறது. புதுச்சேரி அரியாங்குப்பத்தின் கிழக்கே வங்கக் கடற்கரையோரம் இருந்து மறைந்து போன குடியிருப்புப் பகுதியே அரிக்கமேடு. அங்கு அகழ்வாராய்ச்சி மூலம் ரோமானிய செப்புக் காசுகள், வெள்ளி நாணயங்கள், சுடுமண் ஓடுகள், சுடுமண் பொம்மைகள், சுவர்ப்பகுதிகள், சாயத் தொட்டிகள், நீர்த் தொட்டிகள் முதலியன கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. சிந்துவெளி, ஹரப்பா போல அரிக்கமேடு அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் நன்கு விவரித்துள்ளார். பிராகிருத எழுத்துக்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் சுடுமண் ஓடுகளில் உள்ளன என்பதை நிழற்படங்களோடு வெளியிட்டுள்ளமை நூலுக்குச் சிறப்பளிக்கிறது. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய சிறந்த நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!