விலைரூ.85
புத்தகங்கள்
Rating
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 200 )
எழுத்தாளர் சாரு நிவேதிதா, தன் மனதை பாதித்த விஷயங்கள், பார்த்த நிகழ்வுகள், சுற்றுப்பயண அனுபவம் ஆகிய சம்பவங்களை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார். திரைப்படம் பார்த்து, கோல்ப் ஆட ஆசைப்பட்டது முதல், திரைப்படத்தில் 40 வினாடிகள் இடம் பெறும் காட்சிக்காக, இரவு பகலாக வேலை பார்த்தது வரை, தன் சொந்த அனுபவங்களையும் சுவாரசியமாக எழுதியுள்ளார். உலகில் நடந்த, நடக்கும் பல்வேறு வினோதமான, புதிய தகவல்களையும் தனக்கேவுரிய விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார். குறிப்பாக, சீனாவில் மாணவர்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறையை கண்டிக்கும் வகையில் ஓவியர் ஒருவர், தன் விரலை அறுத்துக் கொண்டது, நாயின் மீது அதிக அன்பு கொண்ட ஐரோப்பியர்கள் நாய் கறி சாப்பிட்டது போன்ற விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!