முகப்பு » மருத்துவம் » மருத்துவக் களஞ்சியம்

மருத்துவக் களஞ்சியம்

விலைரூ.450

ஆசிரியர் : சிவ தியாகராஜா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 (பழைய எண் 4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 608)

தூய தமிழின் சிறந்த அறிவும், மருத்துவத்தை அக்குவேறு ஆணி வேறாய் பிரித்துக் கொடுக்கும் அறிவும் இணைய பெற்ற டாக்டர், மிகச்சிறந்த நூலை நமக்கு தந்திருக்கிறார். பெரும்பாலான மருத்துவச் சொற்களுக்கு தமிழ் வடிவம் கிடைப்பது அரிது என, நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது தவறு என்பதை நிரூபித்திருக்கிறார் ஆசிரியர்."ஆர்ட்டரி என்ற சொல்லுக்கு மிக அழகாக, "நாடி என்று குறிப்பிடுகிறார். "வெய்ன் என்பதற்கு, "நாளம் எனக் குறிப்பிடுகிறார். இதெல்லாம், நாம் முந்தைய பேச்சு வழக்கில் பயன்படுத்திய சொற்கள் தான் என்றாலும், இப்போதைய பேச்சு வழக்கில், மறைந்து விட்டது உண்மை. ஸ்டைலாக, "ஆர்ட்டரி என்கிறோம். "ரத்தம் எடுக்க சொன்னாங்க... எனக்கு, "வெய்னே கிடைக்கல... என, பெருமையாக பேசிக் கொள்கிறோம். மருத்துவத்தை, "ஆங்கிலம் இல்லாமல் படிக்கத் தெரியாதே... என அங்கலாய்க்க வேண்டாம். எளிய தமிழில், அதன் அருகிலேயே, அடைப்புக் குறிக்குள், அதற்குரிய ஆங்கில மருத்துவச் சொற்களும் உள்ளன. சளி, காய்ச்சல் முதல், மூளை நோய், மனநலக் குறைவு வரை, அனைத்தும் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 64 தலைப்புகளில், 608 பக்கங்களில் எழுதப்பட்ட முழு மருத்துவக் கையேடு இது. இலங்கை தமிழுக்கே உரிய, ட எழுத்தை ற என்று எழுதும் பாணி இருப்பதால், தமிழகத் தமிழில் படித்து பழக்கப்பட்டிருப்போருக்கு, சற்றே சிரமம் ஏற்படுவதையும் மறுக்க முடியாது. உதாரணமாக, புரோஸ்டேட் என்ற சொல்லுக்கு, "புரொஸ்ரேற் என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி சில வார்த்தைகள்... அனுசரித்தால், அபரிமித அறிவை பெறலாம்.

Share this:

வாசகர் கருத்து

- ,

fine. medicines details are ok. tamil fanatism is totally unwarranted....diesel and petrol like words accepted...what happened to our prestige...nothing...we live rich and with pride....please do not mix tamil craze and fanatics in the medical service.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us