விலைரூ.50
புத்தகங்கள்
Rating
குமரன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17, போன் : 2435 3742. (பக்கம்: 60)
"பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியார். அவர் எழுதும் கதைகள் பாட்டுக்களை போலவே பரவசமும் நவரசமும் மிகுந்தன. கதைகள் மிகுந்த நகைச்சுவையும், சீர்திருத்தப் போக்கும் கொண்டவை. 34 கதைகளை பாரதியார் இந்த நூலின் வழியே நமக்குச் சொல்லுகிறார். கதாபாத்திரங்களுக்கு பாரதியார் வைத்த பெயர்கள் விந்தையானவை; இதோ சில: மிளகாய்ப் பழச்சாமி, நெட்டையன், கட்டையன், சொரியன், கரியன் கடற்கரை ஆண்டி. புதிய கோணங்கி கதையில், குடுகுடுப்பைக்காரன் பாடுவதாகப் பாரதியார் பாடியுள்ளது முற்போக்குச் சிந்தனையாய் முத்திரை பதிக்கிறது. கதைக்குள் வரும் கவிதை இது. "படிப்பு வளருது, பாவம் தொலையுது! படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான், ஐயோவென்று போவான். வேடிக்கைக் கதைகளை பாரதியார் எழுதினாலும், அதற்குள்ளே கவிதை வெடிகுண்டுகளைப் புதைத்து வைப்பதுதான் அவர் வாடிக்கை! பாரதியாரின் சிறுகதை சித்திரம் அருமை.
வாசகர் கருத்து
- ,
too
Nancy - Coimbatore,இந்தியா
naindri
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!