விலைரூ.120
புத்தகங்கள்
முகப்பு அட்டையில் திருமால் என்றால், செந்தூர் சண்முகன் அருள் பாலிக்கும் காட்சியும், பாடலும் உண்டு. தாய்நாட்டின் மீது, அன்பு ஆயிரம் மடங்கு மகாத்மா காந்திக்கு பெருகியதற்கு விவேகானந்தர் கருத்துக்கள் காரணம் என்று, சுவாமி விமூர்த்தானந்தர் அழகாக விளக்குகிறார்.கற்பிற்சிறந்த காரிகைள் ஆறுபேர், அன்னமாச்சாரியார் பெருமைகளைக் கூறும் தகவல்கள் வண்ணப்படங்களுடன் அழகூட்டுகின்றன.வாழ்வு பொற்காலமாக மாறும் என்பதை ரமணமகரிஷி குறித்த படைப்பு காட்டுகிறது. முன்னோர்கள் ராமன் என்ற பெயரில் இறைவனாகக் கண்டு எழுச்சி பெற்றதைப் போல தானும் எழுச்சி பெறுவதாகக் காந்திஜி கூறிய கருத்து கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது. நேபாள எல்லையில் அமைந்த முக்திநாத் தரிசனத்தை இந்திரா ரமணி விளக்குகிறார். அதே போல கயிலைக் காட்சியை ஜெயா சீனிவாசன் விளக்குவதும் அருமை. பசுபதிநாதர் ஆலயத்தையும் மலரில் கண்டு களிக்கலாம். ஆன்மிகத்தில் உன்னத நிலையை அடைய வில்லை என்று எழுத்தாளர் பாலகுமாரன் பளீச்சென கூறுகிறார்.அதே போல ஞாயிற்றுக்கிழமையானால் விடுமுறை நாள், அதில் ஏதோ புதிதுபுதிதாக காரியங்கள் ஆற்றலாம் என்று நினைக்கும் போக்கை மாபெரும் கி.வா.ஜ., தன் அனுபவமாக எழுதியதிருப்பதை இன்றைய இளைஞர்கள் படித்தால் ரசிப்பர். தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும் தகவல் உண்டு. முன்னணி எழுத்தாளர்களின் 25 சிறுகதைகள், அழகான சிந்தனையைத் தூண்டும் கவிதைகள், வண்ணப்படங்கள், நேர்த்தியான அமைப்பு ஆகிய எல்லா அம்சங்களும் கொண்ட மலர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!