10 நானா தெரு, பாணடிபஜார், தி.நகர், சென்னை - 600 017.
பக்கம்: 176,
தியானம், யோகம் ஆகியவற்றை ஞானத்துடன் இணைத்துப் பார்க்கும் போது, அது பல படி நிலைகளைக் கடந்து எங்கோ உள்ளது போலவும், பல சாதனைகளையும், பிறவிகளையும் விஷய வாசனைகளையும் கடந்து அடையப்பட வேண்டிய ஒரு ஆன்மிக மர்மம் என்பது மிகவும் எளிமையானது. கண நேரத்தில் எவரும் ஞானமடைதல் சாத்தியம். தியானத்தை விடு; ஞானத்தைப்பெறு! சும்மா இரு! என்கிறார் பகவத் ஐயா என்னும் இல்லறத்துறவி.
கோவைக்கு மேற்கே, கேரளப்பகுதியில் சிறுவாணி ஆற்றங்கரையில் "சத்தர்சனம் என்ற ஞானக்குடில் நண்பர்களின் உதவியோடு அமைத்த நூலாசிரியருக்கு பகவத் ஐயா மூலம் ஏற்பட்ட "ஞான விடுதலை அனுபவத்தை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் மிக வித்தியாசமான நூல்.