விலைரூ.75
புத்தகங்கள்
பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
விலைரூ.75
ஆசிரியர் : கவிக்கோ ஞானச் செல்வன்
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
பகுதி: தமிழ்மொழி
Rating
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108.
(பக்கம்: 176)
"சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே என்பது, பாரதியின் வாக்கு. ஆனால், தமிழ்ச் சொற்களை எத்தனை பேர் இன்று சரியாக எழுதுகின்றனர் என்பது கேள்விக்குறியே. பத்திரிகைகள், அச்சிட்ட புத்தகங்கள் போன்றவற்றில், பிழைகள் மலிந்துகிடப்பது, மறுக்க முடியாத ஓர் உண்மை.பொது இடங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் பிழையான சொற்களைப் பார்க்கும் போது, மனம் வேதனைப்படுகிறது. நம் தாய்மொழியை நாமே
தவறாகக் கையாளலாமா என்பது சிந்திப்பதற்குரிய ஒன்று. அதை சிறந்த வகையில் தமிழறிஞரான ஆசிரியர் கையாளுகிறார்."கடற்கரை எனும் சொல்லை, "கடற்க்கரை என்று தவறாக எழுதியிருப்பதை மாடிரயில் நிலையங்கள் பலவற்றில் காணமுடிகிறது. வழிபாட்டுக் கூடம் என்பதைச் சிலர் வழிப்பாட்டுக் கூடம் என எழுதுகின்றனர். வழிபாடு வேறு, வழிப்பாட்டு என்பது வேறு. "வேலை பார்த்தான் என்பதை, "வேலைப் பார்த்தான் என எழுதினால், பொருள் மாறுப்பட்டுவிடும்.இப்படி ஏராளமான சொற்களை, எப்படி நாம் பொருள் மயக்கத்தோடு தவறாக எழுதுகிறோம் என்பதைப், பல எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி, எளிய முறையில் அவற்றை திருத்திக்கொள்ளும் வழிமுறைகளை, இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். நாளிதழின் வார இணைப்பு இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மட்டுமல்லாது, எல்லாரும் படித்தறிய வேண்டிய இலக்கண விளக்க நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!