விலைரூ.140
முகப்பு » கட்டுரைகள் » அறிவின் தேடல்
புத்தகங்கள்
Rating
757, அண்ணா சாலை, சென்னை-2.
(பக்கம்: 400)
பல நூறு ஆண்டுகளாக, உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே, கடவுள் நம்பிக்கை என்பது இருந்து வருகிறது. அதே போல, கடவுள் மறுப்புக் கொள்கையும், பகுத்தறிவுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல் வளர, வளர, மனித மனம் அகம்பாவத்தின் உச்சத்தை நோக்கிப் பயணப்படுகிறது.
ஏதாவதொரு சந்தர்பத்தில், நம்மையும் மீறிய சக்தி, நம்மை வழிநடத்திச் செல்கிறது என்று சொல்லாமலும் இருப்பதில்லை, மனித சமூகம்.
மா.பாபு மிகுந்த சிரமத்துடன் இந்த சிக்கலான கடவுள், விஞ்ஞானம், பகுத்தறிவு ஆகிய விஷயங்களை எடுத்துக் கொண்டு, ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அவருடைய ஆய்வில் உள்ள நேர்மை பாராட்டுக்குரியது. ஆனால், இறுதியில், அவர் முன் வைக்கும் அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியது. நாத்திகத்தைக் கோடிட்டுக்காட்டி, மென்மையாக வலியுறுத்தித்தான் இந்த ஆய்வா என யோசிக்கத் தூண்டுகிறது.ஆனால், நம்பிக்கையை தகர்க்கக் கூடியவையல்ல.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!