விலைரூ.250
புத்தகங்கள்
Rating
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை
(பக்கம்: 624)
தமிழ் எழுத்துலகில் அழியா வரம் பெற்ற சாதனையாளர் மு.வரதராசனாருக்கு இது நூற்றாண்டு. இவரைப்பற்றி முதன்முதலில் நூல் எழுதியவர் "தமிழ்ச் சுடர் முனைவர் இரா.மோகன். இவர் மு.வ., பற்றி எழுதிய ஐந்து நூல்களையும் ஒரு சேர தொகுத்து, அறிவுக்களஞ்சியமாய் இந்த முத்தான மு.வ.களஞ்சியம் வெளிவந்துள்ளது.
மு.வ.,வின் நாவல்கள், மணிமொழிகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ஆய்வறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிந்திருக்க வேண்டிய அரிய இலக்கிய பார்வை, இரா.மோகனின் சீரிய சொல்லாட்சியில் பக்கங்கள் தோறும் மிளிர்கிறது. மு.வ.,எழுதிய முதல் நாவலை (செந்தாமரை-1946), தனது ஆசான் என்றும் பாராமல் விமர்சிக்கிறார் ஆசிரியர். இதுவே ஒரு நல்ல ஆய்வு நூலுக்கான தகுதியை பெறுகிறது. "மு.வ.வின் கடிதங்கள்-1960, 70களில் அறிஞர்களின் கருத்துபரிமாற்றத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!