விலைரூ.120
முகப்பு » கட்டுரைகள் » தமிழ்ப் புத்தாண்டு
புத்தகங்கள்
தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே
விலைரூ.120
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: மூவர் முதலிகள் முற்றம்
பகுதி: கட்டுரைகள்
Rating
தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே
வெளியீடு: மூவர் முதலிகள் முற்றம்
தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா என்ற குழப்பம் 2008-ல் அப்போதைய தமிழக முதல்வரால் துவக்கப்பட்டு "தை தான் என்று சட்டம் இயற்றினார். 2012-ல் முதல்வரான ஜெயலலிதா அந்தச் சட்டத்தை ரத்து செய்து பழைய வழக்கப்படி, சித்திரையை தமிழ்ப்புத்தாண்டுத் துவக்கம் என்று அறிவித்திருக்கிறார். இவற்றில் எது சரி? இரு தரப்பிலும் உள்ள அறிஞர் பெருமக்களிடம் சான்றுகள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில் சித்திரையை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று இப்புத்தகத்தை வெளியிட்டிருப்போர் முடிவுக்கு வந்துள்ளனர்.
சித்திரையை புத்தாண்டுத் துவக்கம் என்பதை மெய்ப்பிக்கும் ஆவணங்களும், அதை விளக்கும் 20 கட்டுரைகளும் (அறிவியல், வானவியல், பருவ சுழற்சி, இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, வாழ்க்கை முறை, விவசாயம், பண்டிகைகள், பண்பாடு, மரபு) இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தை மாதம்தான் தமிழ் புத்தாண்டுத் துவக்கம் என்று வாதிட்ட அறிஞர்கள் ஒருவராவது தங்கள் கட்டுரையை அனுப்பவில்லை என்ற விளக்கமும் தரப்பட்டிருக்கிறது .
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!