விலைரூ.70
முகப்பு » கட்டுரைகள் » சங்கத் தமிழர்
புத்தகங்கள்
சங்கத் தமிழர் வாழ்வியல்
விலைரூ.70
ஆசிரியர் : தா.நீலகண்டம் பிள்ளை
வெளியீடு: செம்மூ தாய் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 144
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழரின் மொழி வளம் இலக்கண- இலக்கிய உச்சம்- நாகரிகம்- பண்பாடு -வாழ்வியல்-அரசியல் உள்ளடங்கிய பல ஆய்வுப் பதிப்புகள் தொடர்ந்து புத்தகச் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழனது பொறுமையையும், ஏற்றமிகு மாட்சிமையினையும் எத்தனை காலம் தொடர்ந்து எத்தனை பேர் பேசினாலும், பதிவு செய்தாலும் நாழிக்கிணற்று நீர் போல பல செய்திகளை உள்ளடக்கியது தமிழர் குல வரலாறு. இது நாள் வரை வந்த நூல்களை விட இந்நூல், தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.பல செய்திகளை தகுந்த மேற்கோள்களோடு சுவைபட தந்திருப்பது சிறப்பு.
"சங்க கால வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் துவங்கி, "காவல் மரம் என்ற தலைப்போடு 21 கட்டுரைகளோடு நூல் நிறைவடைகிறது."நடராஜர் உருவத்தால் தமிழன் அறிவியல் கலையின் உச்சியை எட்டியுள்ளான்! -பக்கம் 29"அரிசி - அன்றும் இன்றும் எனும் கட்டுரை உட்பட பக்கத்திற்குப் பக்கம் அற்புதமான, நுணுக்கமான, சுவைபட பல செய்திகளை நூலில் பதிவு செய்து, நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஆசிரியர் .
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!