விலைரூ.120
முகப்பு » கட்டுரைகள் » கம்பனில் இவர்களும்
புத்தகங்கள்
கம்பனில் இவர்களும் இருந்தனர்
விலைரூ.120
ஆசிரியர் : சாலமன் பாப்பையா
வெளியீடு: விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 356
மதுரைக் கம்பன் கழகம் மாதந்தோறும் அறிஞர்களை அழைத்து, ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அவ்வகையில் 2011 ஆம் ஆண்டில், நிகழ்ந்த சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தொகுக்கப் பெற்று இந்தநூலாக வெளிவந்துள்ளது.சைவ, சமய நூல்களாகிய பன்னிரு திருமுறைகளிலும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலையிலும், கம்பராமாயணக் கருத்துகள் இடம் பெற்றுள்ளமையை முதலிரு கட்டுரைகள் விளக்குகின்றன.
கம்பனில் இடம் பெற்றுள்ள வரங்கள், சாபங்கள், பெண்ணியச் சிந்தனைகள், சபதங்கள், இயற்கை இறந்த நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள் கட்டுரைகளில் விளக்கப் பெற்றுள்ளன. கம்பராமாயணத்தில் வருகின்ற மேகநாதன், தளபதிகள், முனிவர்கள் பற்றி விளக்கமாகப் பேசப்படுகின்றன. "மேகநாதன் கட்டுரையில், இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியின் தளபதியாய் இருந்த ரோமல் என்பவனை மேகநாதனோடு ஒப்பிட்டுக் கூறும்போது, மேற்கோள்கள் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பெற்றுள்ளன. தவிர்க்கமுடியாத இடத்தில் மட்டும் ஆங்கிலம் பயன்படுத்தப் பெற்றிருக்கலாம். சொற்றொடர்கள், பத்திகள் ஆங்கிலத்தில் மிகப்பலவிடங்களில் சேர்க்கப்பெற்றுள்ளன.
இறுதியாக உள்ள கட்டுரையே நூலின் தலைப்பு. இக்கட்டுரையில் அமைச்சர்கள், படைவீரர்கள், தேர்ப்பாகன், யானைப்பாகன், ஒற்றர், தூதர், நிமித்திகர், கவிகள், புலவர்கள், பாணர்கள், விறலியர், உழவர் முதலிய, பொதுவாகப் பேசப்பட்டுள்ள, அத்தனைப் பேரைப் பற்றியும் பட்டியலிட்டு, கம்பன் கூற்றுக்களுடன் விளக்கம் தந்துள்ளார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.ஆய்வு முனைவர் பட்டம் பெற்றவர்களும், பேராசிரியர்களும் ஆற்றிய சொற்பொழிவுகள் கட்டுரைகளாக அச்சேறியுள்ளன. இந்நூலினை ஆழ்ந்து படித்து, கம்பனுடைய கருத்துகளையும், பிற ஆய்வுக் கருத்துக்களையும் அறியலாம். இது ஒரு நல்ல ஆய்வு நூல்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!