விலைரூ.125
புத்தகங்கள்
Rating
பக்கம்: 180
கதை, காவியம், வரலாறு படிப்பதால் அறிவு வளருகிறது. ஆனால், அன்றாடம் வாழும் முறையைத் தெரிந்துக் கொள்ள, பெரிய பெரிய நூல்கள் உதவாது. இதுபோல, "இங்கிதத்தைக் கற்றுத்தரும் கையடக்க நூல்களே இன்று பெரிதும் தேவையாக உள்ளது. காரணம் வாழ்வே திசை மாறிப்போய்க் கொண்டுள்ளது. பொதுவாழ்வில் காணும் போலித்தனங்களையும், வீண் ஆடம்பரங்களையும், அநாகரிகங்களையும் இந்த நூல் தோலுரித்துக் காட்டி திருத்த முயல்கின்றன.முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி. துணிவுக்கும், நேர்மைக்கும் அடையாளம் ஆனவர். ராமேன் மகசேசே பரிசை பெற்ற இவரும், புத்தகத் துறை சாணக்கியர் பவன் சவுத்திரியும் சேர்ந்து, இரட்டைக் குதிரை பூட்டிய தேராக இந்த நூலை அற்புதமாக எழுதியுள்ளார்.
அலுவலகத்தில் பழகுவது, உணவகங்களில் தங்கும் போதும், உணவருந்தும் போதும், சாலையைக் கடக்கும் போதும், விளையாட்டு மைதானங்களில், விழாக்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் மென்மையாகவும், உளவியல் பூர்வமாகவும் விளக்கப்பட்டுள்ளன.""திக்குத் தெரியாத காட்டில் என்ற தலைப்பில் உள்ள கேள்வி - பதில், உரியடியில் ஏறி பரிசை அடைவது போல் உள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!