விலைரூ.250
முகப்பு » கட்டுரைகள் » பாரதத்தில் ராஜதர்மம்
புத்தகங்கள்
பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்
விலைரூ.250
ஆசிரியர் : ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வெளியீடு: வர்ஷன் பிரசுரம்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 456
ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக்113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், "நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன குறைவு வரும்? நீயே ஆளணும். அதான் எங்க பிரார்த்தனை என்பார்களாம். (பக் 132)மஹாபாரதத்தில் கொடுங்கோலன் கனீநேத்திரன் ஆட்சிபீடத்திலிருந்து அகன்ற நிகழ்ச்சியை விவரித்து, "மக்களுக்கு அன்றும் சரி, இன்றும் சரி அரசியல் முதிர்ச்சி இருந்ததை அறிய முடிகிறது (பக். 318)
"ஒரு சபையில் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ, அவர்களை எதிர்த்துப் பேசப்பலரும் துணிவதில்லை என்ற கோழைத்தனம் அக்காலத்திலும் இருந்திருக்கிறது (பக். 323)ராமாயணம், மகாபாரதம், சுக்கிரநீதி இப்படிப்பல விவரங்களை தார்மீக அடிப்படையில் விவரித்துள்ள நூலாசிரியர், தற்கால அரசியல் கருத்துக்களைப் பலவந்தமாகத் திணித்திருப்பது சற்று நெருடலாக உள்ளது. மன்னராட்சி என்பது வேறு, மக்களாட்சி என்பது வேறு. எனவே, தர்ம பரிபாலனம் என்பது முறையாகச் செயல்படுத்த இயலாது என்பதையும் நூலாசிரியர் ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளார். எல்லாருமே விரும்பிப் படிக்கக்கூடிய விறுவிறுப்பான அரசியல் ஒப்பீட்டு ஆய்வுநூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!