விலைரூ.100
புத்தகங்கள்
Rating
பக்கம்: 192
இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில், முத்திரைப் பதித்த எழுத்தாளர், இந்திரா பார்த்தசாரதியின், மூன்று குறுநாவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
நான் இங்கிலீஷ் பாடம் மட்டும் சொல்லித் தரலே, சீரழிஞ்சு போயிருக்கிற சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கான வழிகளையும், அவர்களுக்குச் சொல்லித்தர்றேன் (பக்15) "பூமித்தாய் சாப்பிடச் சோறுபோடுது, அப்பேர்ப்பட்ட பூமியை, தரிசாக்கிக் கட்டடம் கட்டறாங்களே அதுவும் சினிமா கொட்டகை, இது நம்ம தாயை அவமதிக்கிற மாதிரி (பக் 50). இப்படி, "குண்டலிகேசியிலும் ஒவ்வொருத்தனும், தான் தான் தர்மத்துக்கு நாட்டாண்மைக்காரனா நினைச்சுக்கிறது தான் உலகத்திலே முக்கால் வாசிக்
சண்டைக்குக் காரணம் (பக்127) என, "ஊனம் நாவலிலும், "அவன் உயரத்தைப் பற்றிச் சொல்லவில்லை. உலகத்தின் துயரத்தை எல்லாம் தான் தாங்கிக் கொண்டிருப்பது போல் அவன் முகம் இருக்கும். அவன் மேதையா, பைத்தியமோ யார் கண்டனர் (பக் 167) என, கானல் நீர் குறுநாவலிலும் கதைமாந்தர்கள் மூலம், சமூகப் பிரச்னைகளை ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளார்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!