பக்கம்: 120
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல், இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, இந்திய வரலாற்று நூலாகும். மொஹஞ்சதாரோவில் துவங்கி, திராவிடர்கள், ஆரியர்கள், ராமாயணம், மகாபாரதம், புத்தர், ஜைன மதம், மவுரியர்கள், குப்தவம்சம்,ஹீணர்கள் என, வட இந்திய வரலாற்றையும், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என, தென்னிந்திய வரலாற்றையும் மொகலாயர், பறங்கியர்கள் என, சுதந்திரப் போர் வரை சுருக்கமாக விளக்க, மகாத்மாவின் கொலை வரை இதில் வரலாறு பதியப்பட்டுள்ளது. சிறியவர்களுக்காகப் படைக்கப்பட்ட இந்நூலினை, பெரியவர்களும் படித்துப் பயன் பெறலாம். வரலாற்றின் முன்னோடி நூலிது.