ஆசிரியர்- தொ.மு.சி.ரகுநாதன், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600 098.எனது இலக்கிய நோக்கையும் போக்கையும் உருவாக்கி வளர்த்ததில் பாரதிக்கும் பெரும் பங்குண்டு.எனவே எனது இலக்கிய வாழ்வை மேற்கொண்ட காலந்தொட்டு, நான் பாரதியைப் பலவாறும் பயின்று வந்திருக்கிறேன்.எனது இலக்கிய நோக்கத்திற்கும் போக்கிற்கும் ஏற்ப,சரித்திர வளர்ச்சியின் ஒளியில் அவனை நான் பலவாறும் இனம் கண்டு வந்தபோதே, இந்த நூலை எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சரித்திரத்தை என்றும் சாகடிக்கவோ மூடி மறைக்கவோ முடியாது. அதனை இனம் கண்டறியக்கூடிய எச்சமச்சங்களும் சுவடுகளும் இலைமறை காய்மறையாக எங்கெங்கோ இடம் பெற்றிருக்கத்தான் செய்யும். அத்தகைய எச்சமச்சங்களை இனம் கண்டறிந்து அவற்றை ஆதாரமாகக்கொண்டே நான் இந்நூலை எழுதியிருக்கிறேன். இந்நூலின் நான் கண்டுள்ள முடிவுகள் ஒவ்வொன்றுக்கும், அதற்கான சான்றை அல்லது மேற்கோளை ஆங்காங்கே சுட்டிக்காட்டியே,அந்த முடிவை வழங்கியுள்ளேன்.