விலைரூ.180
புத்தகங்கள்
Rating
பக்கம்: 320
இன்று, நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இயங்கி வரும், இன்டர்நெட் பயன்பாட்டின் அனைத்து கூறுகளையும், தெளிவாக விளக்கும் வகையில், அனைவருக்கும் புரியும் மொழி நடையில், இந்நூலை எழுதியுள்ளார் புவனேஸ்வரி.அன்றாட வாழ்க்கையில், நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஆன்-லைனில் எப்படி பெறலாம் என்பதை விளக்கப் படங்களுடன் விவரித்துள்ளார்.
மின்னஞ்சல் அனுப்பிப் பெறுவது, வங்கி கணக்குகளை கையாள்வது, பஸ், ரயில் மற்றும் விமான பயணங்களுக்கு டிக்கெட் எடுப்பது, பாஸ்போர்ட் பெறுவது, திருமண வரன் பார்த்தல், கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்த தகவல்களைப் பெறுதல், சமூக இணைய வலைத்தளங்களில் பங்கேற்றல், வர்த்தகம் மேற்கொள்ளுதல், வலை மனைகளை அமைத்து பயன்படுத்துதல், என்கிற அளவிற்கு, 26 பிரிவுகளில் இணைய திரைக் காட்சிகளுடன் விளக்கப்பட்டுள்ளது.இதுவரை இணையத்தை பயன்படுத்தாத ஒருவர், இந்த நூலையே ஆசானாகக் கொண்டு பயன் பெறலாம். அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!