விலைரூ.250
முகப்பு » வாழ்க்கை வரலாறு » வாலிப வாலி
புத்தகங்கள்
Rating
பக்கம்: 374
""கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்! கண்விழித்தாமரை பூத்திருந்தேன் - எனும் காதல் பாடல், ஆனாலும் பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பியச் செய்தி ஆனாலும், உலகம் சுழல்கிறது; அதன் பயணம் தொடர்கிறது - வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
வள்ளிக் கணவன் பேரைச் சொல்லிக் கூந்தலில் பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் கலைஞர் வாலி, தனிப் பெரும் சிகரமாகி, உயர்ந்து நிற்கிறார். பல தலைமுறை கண்ட சீரஞ்சீவி!பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, தேசிய விநாயகம் பிள்ளை, ச.து.சு. யோகியார்.... கவிதைகள் ஆரம்ப கால உணர்வு. நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் சென்னைக்கு வந்தார். பின் அசுர வளர்ச்சி என்பது நாமறிந்தது.""நீங்க எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள்... கண்ணதாசனும், எழுதி இருக்கிறார். இருவர் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்? என்பது நெல்லை ஜெயந்தாவின் கேள்வி (பக். 124)
வாலி பதில் தருகிறார்: நான் எம்.ஜி.ஆருக்கு காதல் பாட்டு எழுதினாலும் சரி, தனிப்பாட்டு எழுதினாலும் சரி, அதில் அரசியல் குணாதிசியங்கள் பிரதிபலிப்பது போல் தான் எழுதுவேன்! எம்.ஜி.ஆர்., தனிப் பாடல்களில் சமூகக் கருத்துக்கள் நிறைய இருக்கும். அவரும் அதையே விரும்பினார்.சிவாஜிக்கு குடும்ப சூழ்நிலை, தத்துவம், ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எழுதுவேன்.நிறைய விஷயங்களை படிக்க வேண்டும். நாளுக்கு நாள் நடைபெறும் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய உடல்முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது! ஆனால், என் உள்ளம் முதுமை அடையாமல், என்னால் வைத்துக் கொள்ள முடியும்... தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்தப் புத்தகத்தையும் நேசிக்கலாம்! சுரங்கம் இது!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!