விலைரூ.120
புத்தகங்கள்
Rating
பக்கம்: 184
கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு. சோழப் பெருமன்னனாக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு.4ம் நூற்றாண்டு முதல் கி.மு.12ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி.12ம் நூற்றாண்டு முதல் கி.பி.13ம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய்கீர்த்தியும் பேசப்படுவதை பார்க்கலாம்.
அகம், புறம் என்ற இரு நூல்களிலும் ஒன்பது பாடல்களிலே பாராட்டப்படுகின்ற கரிகாலன் முதலாம் கரிகாலன் என்றும், பத்துப்பாட்டில் இரண்டாம் பாடலாகிய பொருநராற்றுப்படை கூறும் உருவப் பஃறேரிளையோன் சிறுவனாகிய கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்றும், பத்துப்பாட்டின் ஒன்பதாவது பாடலாகிய, பட்டினப்பாலை கொண்ட திருமாவளவனைக் கலிங்கத்துப்பரணி கூறுவதைக் கொண்டு மூன்றாம் கரிகாலன் என, மிக அற்புதமாய் அரை நூற்றாண்டிற்கும் முன்னமே பதிவு செய்துள்ளார்.
தோற்றுவாய், முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், மூன்றாம் கரிகாலன், மூன்று கரிகாலனது காலம், காவிரியாறு, கரிகாலர்கள் காலத்திய இரு பெரு நகரங்கள், கரிகாலன் காலத்திய புலவர்கள் பெரும்பாணாற்றுப்படை என, ஒன்பது தலைப்புகளில் வியக்க வைக்கும் ஆய்வுச் செய்தியினை பதிவு செய்துள்ள மிக மிக அற்புதமான ஆய்வுக் கருவூலம். தரமான ஆய்வு நூல்களையும், பழமையான அரிய தமிழ் புதையல்களை வெளிக் கொணர்ந்து வாசகர்களுக்கு, தமிழ்க் கொடை தந்ததற்கு பாராட்டுதல்கள்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!