விலைரூ.80
புத்தகங்கள்
Rating
பக்கம்: 112
தமிழ்மொழியில் அ, இ, உ என, மூன்று சுட்டெழுத்துக்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பிற மொழிகளில், அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. "அ என்னும் சுட்டெழுத்து, அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும், "இ என்னும் சுட்டெழுத்து இவன், இவ்வீடு என, அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். "உ என்னும் சுட்டெழுத்து, தற்காலத்தில் பேசப்படுவதில்லை.
"உ என்னும் சுட்டெழுத்து, தொலைவுக்கும், அருகுக்கும் இடையில் உள்ள பொருளைச் சுட்டுவதாக அகராதிகள் குறிக்கின்றன. பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் உகரம் பற்றி அகராதிகள் கூறுகின்ற கருத்தினை மறுத்து, இந்த நூலினை எழுதியுள்ளார். "உ என்னும் சுட்டெழுத்து, அருகிலும் தொலைவிலும் உள்ள பொருளை குறிக்காமல்,கண்ணுக்கு தெரியாத, பிற இடங்களில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்குப் பயன்படுகிறது என்று இந்த நூலில் மெய்ப்பித்துள்ளார். இதற்காக, சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரையிலும் "உ என்னும் சுட்டெழுத்து இடம்பெற்றுள்ள பகுதிகளை எல்லாம் திரட்டி விளக்கியுள்ளார். இலங்கையிலும்"உ என்னும் சுட்டெழுத்து, கண்ணுக்குத் தெரியாத பொருளையே சுட்டுவதையும், இலங்கை எழுத்தாளர்களின் நாவல், சிறுகதைகளின் துணைகொண்டு தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்மொழியில் இன்னும் பல செய்திகள் ஆராயப்பட வேண்டியுள்ளன என்பதற்கு, இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!