விலைரூ.180
புத்தகங்கள்
திராவிடமா? தீரா விடமா? (முதல் பாகம்)
விலைரூ.180
ஆசிரியர் : மு.வலவன்
வெளியீடு: முத்தையன் பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
பக்கம்: 296.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு, இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை.
ஆட்சி அமைப்பு வசதிக்கு, "ஒரு மொழி - ஒரு நாடு என்னும் கருத்து, உகந்ததாக இருக்கும் என்னும் கருத்தை அடிநாதமாகக் கொண்டு, இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.பல்வேறு தேசியத் தலைவர்களையும், திராவிடத் தலைவர்களையும், தமிழ் தலைவர்களையும் நேரில் சந்தித்து உரையாடிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற ஓவியப் பாவலர், மு.வலவன் படைத்துள்ள நூல் இது.
எனவே திராவிடத்தால், தமிழ்நாடும் திராவிடத் தலைவர்களால் தமிழ் மக்களும் அடைந்த இன்னல்களை அழகாகக் காட்டியுள்ளார். தமிழனுக்கு எனச் சுயாட்சி பெற்ற நிலப்பகுதி அமையும் வரை, தேசியமே பாதுகாப்பு எனக் காட்டுகிறது இந்த நூல். கடவுள் மறுப்பு என்னும் கொள்கை கொண்டவர்களால் ராமாயண எதிர்ப்பும், ஆபாசப் பேச்சும் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்பதை, வரலாற்று ஆதாரத்துடன் வழங்குகிறது. அண்மைக்கால வரலாற்று நூல்களில், தனித்துவம் பெற்ற வரலாற்று நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!