விலைரூ.350
முகப்பு » வாழ்க்கை வரலாறு » வீணையின் குரல்
புத்தகங்கள்
வீணையின் குரல் (எஸ்.பாலசந்தர்: ஓர் வாழ்க்கை சரிதம்)
விலைரூ.350
ஆசிரியர் : வீயெஸ்வி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
பக்கம்: 600
இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி, வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ்.பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனி மனித போராட்டச் சாதனைகள் என்று , முப்பரிமாணங்களை, இந்த நூலில் பார்த்து பரவசப்பட்டு பிரமித்து விட முடியும்.
பள்ளிப்படிப்பு முடிக்காது நின்று விட்ட இந்த படிக்காத கலை மேதை, ஆங்கிலத்தையும் கற்று, ஆங்கிலப் படங்களுக்கு நிகரான திகில் படங்களையும், மர்மப் படங்களையும், இசைக்கும், நடிப்புக்கும் முன்னோடியாக நின்று, இயக்கி, பிரமிக்க வைத்துள்ளார்.
யாரிடமும் குருவாகச் சென்று கற்றுக் கொள்ளாத சுயம்பு மேதை, இவரது தனித்தன்மையான வீணை வாசிப்புக்கு, உலகமே தலை வணங்கியது."பத்மபூஷன் விருதும், சங்கீத நாடக அகடமி விருதும், அமெரிக்க நாட்டின் விருதும் என்று உலகெங்கும் முதன்முதலாக, இவரது வீணையின் குரலுக்கு, விருது மழைகள் பொழிந்தன.தன் மனதுக்கு சரி என்று பட்டதை இசையில் துணிவுடன் எடுத்துக் கூறும் பாலசந்தர், சங்கீத உலகில் புதுப்புது யுத்தங்களை நடத்தி, அதில் வெற்றி வாகை சூடினாலும், துணிவுடன் உண்மைக்காக தனி மனிதனாகப் போராடிப் போராடி, உடல் நலம் கெட்டு, மதிப்பை இழந்து, மரணத்தையும் சந்தித்த வரலாறு, படிப்பவர் மனதில், "முகாரி பாடி அழவைக்கிறது.சரஸ்வதி கையில் உள்ள வீணை கருவிக்கு, தன் வாழ்வால் புதுப்புது வரலாறு படைத்த பிறவி மேதையின் அருமை வாழ்வுச் சித்திர நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!