விலைரூ.250
முகப்பு » வாழ்க்கை வரலாறு » தடம் பதித்த மாமனிதன்
புத்தகங்கள்
தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.
விலைரூ.250
ஆசிரியர் : தி.சுபாஷிணி
வெளியீடு: மித்ரஸ் பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
பக்கம்: 400
மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி., தடம் பதித்த தன்மையைத் "தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி.சுபாஷினி. டி.கே.சி.,யும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.,யால் மதிக்கப்பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.
டி.கே.சி.,யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஜஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி.திருமலை, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., - தி.க.சி., முதலானோர் பற்றியும் நூல் எடுத்துரைக்கிறது.டி.கே.சி., என, அழைக்கப்பெறும் சிதம்பரநாதன் என்னும் ரசிகமணியின் வாழ்க்கையை அழகாகத் தெரிவிக்கும் இந்த நூலில், அவரது நிழற்படங்களையும் தேடிக் கண்டுபிடித்து சேர்ந்திருப்பது சிறப்பு. வழக்கறிஞர் உடையில், மனைவி பிச்சம்மாளுடன் டி.கே.சி., என, கறுப்பு வெள்ளைக் காவியமாய் காட்சியளிக்கிறது. டி.கே.சி.,யின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் இந்த நூல், டி.கே.சி., தொடர்புடைய அனைத்தையும் விளக்குவதால், இதை "டி.கே.சி.,யின் உலகம் எனச் சொல்லும் அளவிற்குச் சிறப்பாய் அமைந்துள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!