விலைரூ.100
புத்தகங்கள்
Rating
வைதிக ஸ்ரீ என்ற இதழின் ஆசிரியரான, ராஜகோபால கனபாடிகள்,வேதம், சாஸ்திரம், தர்ம நெறிகளை விளக்குவதில் வல்லவர். இந்த நூலில் அம்மாதிரி சாஸ்திர சம்பிரதாயமான கருத்துகளை எழுதியிருக்கிறார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது, சிறிதளவே உட்கொண்டு, பெரும் பகுதி உணவை வீணாக்கும் பழக்கம் சரியல்ல. நமக்குத் தேவையான உணவை மட்டும் சாப்பிடவேண்டும்.கோவில்களுக்கு செல்வோர் தனக்கும், குடும்பத்திற்கும் பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது.
ஆனால், "ராஜா தார்மிகோ விஜயீது பவ:தேசோயம் நிருபத்ரவோஸ் என்பது காலம் காலமாககோவில்களிலும், வீட்டு விழாக்களிலும் சொல்லும் மந்திரம். தர்மம் தவறாது, ஆட்சி புரியும் மன்னனுக்கு வெற்றியும், அந்த நாட்டில் வாழும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதும் இதன் பொருள். இதை, இன்று எத்தனை கோவில்களில் இந்த மந்திரத்தைச் சொல்லுகின்றனர் என, ஆசிரியர் கேட்கிறார்.பல தகவல்களை குறிப்பிட்டபோதும், தமிழ் விளக்கங்களில் எழுத்துப் பிழை சற்று அதிகமாகவே உள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!