புத்தகங்கள்
அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி
ஆசிரியர் : ச.பொன்ராஜ்
வெளியீடு: போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பகுதி: அறிவியல்
Rating
பக்கம்: 34+230
நம்நாட்டின், பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் தூண்டுகோலாய் அமைந்துள்ளது எனலாம்.
போர் ஊர்திகளின் தொழில் நுட்பங்களும், அவற்றின் தோற்றத்தினை விளக்கும் படங்களும், பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்துறைச் சாதனையாளர்கள் பற்றிய செய்திகள், தொகுக்கப் பெற்றுள்ளன. 1970 - 2012 ஆண்டுகளின் நிகழ்வுகளை, கால வரிசைப்படி தொகுத்தளித்துள்ள நூலாசிரியர் பொன்ராஜ், நம் பாராட்டுக்குரியவர்.இந்நூல் போர் ஊர்தி பற்றிய தொழில்நுட்ப ஆய்வு நூல் ஆகும். எல்லாரும் படித்துப் பயன் பெறலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!