முகப்பு » இலக்கியம் » மங்கையர்க்கரசி

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம்

விலைரூ.270

ஆசிரியர் : ராமநாதன் பழனியப்பன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை

பக்கம்: 496    

தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தன வணிகர் எனப் போற்றப்படுவது நகரத்தார் குடி. கண்ணிமையைப் போல் தமிழையும், சைவத்தையும் வளர்த்து வருகின்ற, பெருங்குடி மரபில் வந்த பெருமகனார் இந்நூலாசிரியர்.
தெய்வச் சேக்கிழார் பெருமான், தமது குடிமக்கள் காப்பியமான பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், "மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி என்றும், "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி என்றும் பாராட்டப் பெற்ற பெருமாட்டி மங்கையர்க்கரசியார். 63 நாயன்மார்களில் மங்கையர் மூவர். அம்மூவரில் மங்கையர்க்கரசியாரைப் பற்றிய பாடல்கள், மூன்று மானுடராகப் பிறந்து மானுடராகவே வாழ்ந்து, சைவத் திருத் தொண்டாற்றிய நாயகியைப் பற்றி மிக மிக நேர்த்தியாக தந்துள்ளார் நூலாசிரியர்.அருமைத் திருமகள், மாட்சிநிறை மனைவி, சமணச் சூழல் ஆய்வாளர், பொறுப்புணர்ந்த அரசி, பெரியாரைத் துணைக் கொண்ட பெருமாட்டி, திறன்மிகு மேலாளர், சைவ மறுமலர்ச்சிக்குக் களம் அமைத்தவர், சம்பந்தரின் பாசமிகு தாய், கணவனது பல வெற்றிகளுக்குக் காரணமானவர், தெய்வப் பாவை என, பத்து தலைப்புகளில் மங்கையர்க்கரசியாரின் மாண்பை ஒப்பிட்டு, சிறந்த இலக்கியமாக நூலாசிரியர் படைத்துள்ளார். ஆனால், அந்தக் கதையில், பன்னிரெண்டு பட்டிமன்ற வினாக்களை எழுப்பி, ஒவ்வொரு வினாவுக்கும், பல்வேறு இலக்கிய மேற்கோள்களோடு மங்கையர்க்கரசியாரை நெறியை நேர்மைப்படுத்திய பாங்கு வியக்க வைக்கிறது.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்,திருக்குறள், கம்ப ராமாயணம், தாயுமானவர், பரஞ்சோதி, வள்ளல் பெருமான், இளங்கோவடிகள், மணிவாசகர், நாயன்மார்கள் என, பல சான்றோர் பெருமக்களின் இலக்கியப் படைப்புகளில் இருந்து, பக்கத்திற்கு பக்கம் மேற்கோள்களோடு பெரிய புராண பாட்டை ஒப்பிட்டுக் காட்டுவது, நூலாசிரியரது ஆழமான புலமையை காட்டுவதாகும்.
கி.பி., ஏழாம் நூற்றாண்டு காலப் பகுதியில், சமணர்களோடு வாதிட்ட நாவுக்கரசு பெருமான், திருஞானசம்பந்தர் போன்ற பெருமக்கள் எதிர் நின்று போராட காரணமாக இருந்த அன்றைய நாளில், பின்புலத்தை ஆசிரியர், தம் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு (பக்கம்:87) பதிவு செய்திருக்கின்ற செய்தியை, தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் புதிய வரவு.சைவ உலகிற்கு, நமது திருப்பணியாய் செய்திருக்கின்ற நூலாசிரியர் பணி, போற்றப்பட வேண்டியதாகும்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us