விலைரூ.100
முகப்பு » கட்டுரைகள் » திருக்குறள்
புத்தகங்கள்
திருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும்
விலைரூ.100
ஆசிரியர் : டி.ஏ.ஆதிகேசவன்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 208
திருக்குறள், மேலாண்மைத் திறமைகள், கணினியின் பயன்கள் ஆகிய மூன்றையும், ஒரு சேர ஆராய்ந்து முப்பரிமாணத்தை இந்த நூல் காட்டுகிறது.அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள திருக்குறள் கருத்துக்கள், நிர்வாக மேம்பாட்டிற்கும், கணினி பயன்பாட்டிற்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதை, 55 தலைப்புகளில் எழுதியுள்ளார்.
திட்டமிடுதல், நேர மேலாண்மை, சாதாரண தொடர் கல்வி, மதிநுட்ப மேம்பாடு, மறதியின்மை, நேர்மை நோயறிதல் போன்ற வாழ்வுக்கு உதவும் வள்ளுவர் வழிகள் காட்டப்பட்டுள்ளன.
செய்ய வேண்டியவற்றைச் செய்யாமையும், செய்யக் கூடாததைச் செய்வதும் கெடுதலாகும் என்ற, 466 குறளுக்கு, மேலாண்மைத் திட்டங்களில் பட்டியல் தயாரித்து செய்ய வேண்டும் என்றும், கணினியில், இதைச் சரியாகப் பதிவு செய்யும் விளக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.இணையம், மின் அஞ்சல், மின் வணிகம் ஆகிய கணினி வழியே, இன்று மின்னல் வேகத்தில் வணிகம் செய்யும் முறையும், அதைப் பயிலும் வகையும், 675 குறள் வழி ஒப்பிடுகிறார் நூலாசிரியர்.முன்னுரையில் திருக்குறள் எழுதி, 2000 ஆண்டுகள் ஆகின்றன என்பது, 2044 என்று இருந்திருக்க வேண்டும். 55 தலைப்புகளில் 57 குறளை மையப்படுத்தி, மேலாண்மை கணினியை ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!