முகப்பு » சமயம் » சைவ சமயக் கலைக்

சைவ சமயக் கலைக் களஞ்சியம்: தொகுதி -7

ஆசிரியர் : முனைவர் இரா. செல்வகணபதி

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

 பக்கம்: 696         விலை: 10 தொகுதிகளுக்கும் சேர்த்து   ரூ.15,000

ஒரு நூலைப் பார்த்தால், பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அவ்வாறு அமைந்துள்ளவை தான், சைவ சமயக் கலைக் களஞ்சியங்கள்.தொகுதி ஏழில், மொத்த பக்கங்கள்: 800. வாழ்த்துரை, அணிந்துரை, சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில், 2,553 புலவர்களின் வரலாறு, அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும், 1 முதல் 355 பக்கங்கள் வரை உள்ளது சிறப்பானது. பின்னிணைப்பாக சைவ சமய அருட்பனுவல் திரட்டு என்ற நிலையில் தொல்காப்பியம் தொடங்கி பாம்பன் சுவாமிகள் வரை பக்கம் 356 முதல் 611 வரை தரப் பெற்றுள்ளன.தேவையான இடங்களில் புலவர்களின் படங்களும், சைவ சமயத்திற்குரிய பல படங்களும் தரப் பெற்றுள்ளன.நமக்குத் தெரியாத செய்திகள் மிகுதியாக உள்ளன. ஒவ்வொரு புலவர் பற்றியும், அவர் எந்த ஊரைச் சார்ந்தவர், எப்போது வாழ்ந்தவர் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகத் தந்துள்ளது சிறப்பாகும்.
சான்றாக, மு.ரா.அருணாசலக் கவிராயர் பற்றி (155), பாண்டிய நாட்டு முகவூரைச் சேர்ந்தவர், இவரது காலம் 1852 - 1939. தந்தை ராமசாமிக் கவிராயர். இவர் இயற்றினவும், பதிப்பித்தனவுமான நூல்கள் வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளன.ஒரு நூலை ஆழமாகப் படித்தால் தான், அதிலுள்ள அரிய தொடர்களைத் தர முடியும். அவ்வாறு சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றிய ஏழாம் திருமுறையில் உள்ள, அரிய தொடர்களைத் தந்துள்ளார் தலைமைப் பதிப்பாசிரியர். அதில் ஒன்று:வழக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்மற்றுநான் அறியேன் மறுமாற்றம் (7774)இதேபோன்று, திருமந்திரத்திலுள்ள அரிய தொடர்களையும் பதிப்பாசிரியர் எடுத்து தருகிறார்.சைவ சமயக் கலைக் களஞ்சியம் - தொகுதி 7ல் இருந்து சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்தால், அவையே பத்து தொகுதிகள், 10 ஆயிரம் பக்கங்களில் வெளியிடலாம்.
சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியம் முதல் பாம்பன் சுவாமிகள் வரை உள்ள நூல்கள், 356ம் பக்கத்திலிருந்து, 611ம் பக்கம் வரை கொடுக்கப் பெற்றுள்ளன. அவற்றில்  மிகச் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார்.அருணகிரியார் பாடல்களுக்கு ஓசைக் குறிப்புகள் தரப் பெற்றுள்ளன. இத்தொகுதியைப் படித்தால் தமிழகத்தின் வரலாற்றையும், தமிழ் இலக்கியங்கள் வரலாற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள  முடியும்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us