முகப்பு » வரலாறு » இஸ்­லா­மியர் காலத்

இஸ்­லா­மியர் காலத் தமிழ் மக்கள் வர­லாறு

விலைரூ.125

ஆசிரியர் : க.ப.அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 208    

   தமிழ்ச் சமு­தாய வர­லாற்றில், பாண்­டியர் காலத்தின் நிறைவுப் பகு­தியில் இஸ்­லா­மியர் நுழைவு திகழ்­கி­றது. மது­ரையை மைய­மாக வைத்து இஸ்­லா­மி­யர்கள்,  60 ஆண்­டு­களே           ஆண்­டாலும் அந்தக் காலக்­கட்­டத்தில் தமிழ்­நாட்டு அர­சி­ய­லிலும், தமிழ்ச் சமு­தா­யத்­திலும் நிகழ்ந்த மாற்­றங்கள் மிகப் பெரி­யவை.
             டில்­லியை மைய­மாக வைத்து இஸ்­லா­மிய அர­சியல் இங்கே இடம் பெற்­ற­போது, அவர்­க­ளது பழக்க வழக்­கங்கள், சடங்கு, சம்­பி­ர­தா­யங்கள் இஸ்­லா­மியர் அல்­லாத தமிழ்        ­மக்­க­ளி­டமும் பர­வின. உணவு, உடை, குழந்தைப் பிறப்பு, சுன்னத் முறை, மூக்­குத்தி  முத­லான அணி­க­லன்கள், கைலி (லுங்கி) என, உடுத்தும் உடை­யிலும் கூடப் பெரு­மாற்றம் நிகழ்ந்­தது. பிரி­யாணி என்ற ஆட்­டி­றைச்சி உணவு, இஸ்­லா­மியர் வர­விற்குப் பின்­­­புதான் தமி­ழ­ரிடம் அதி­மா­க­ ப­ழக்­க­மா­யிற்று!தமி­ழ­கத்தில் வாழும் இஸ்­லா­மி­யர்கள் அனை­வரும் தமி­ழர்­களே... தமிழர் அல்­லாத அயல் நாட்­டவர் இல்லை என­பதை ஆசி­ரியர் கூறு­கிறார். படிக்க வேண்­டிய நூல்.

 

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us