விலைரூ.495
புத்தகங்கள்
ASURA A Tale of the vanquished
விலைரூ.495
ஆசிரியர் : ஆனந்த் நீலகண்டன்
வெளியீடு: லீட் ஸ்டார்ட் பப்ளிசிங் பி.லிட்.,
பகுதி: தமிழ்மொழி
Rating
.Pages : 505
ராமன் பெயர் நிற்கும் காலம் வரை தன் பெயர் நிற்கும் என்பதால், தன்னையே நோக்கி நெடும் பகை ஏற்படுத்திக் கொண்டதாக இராவணன் கூறியதாக கம்ப ராமாயணத்தில் கூறப்படுகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிற்கும் பெயர்களைத் தாங்கியவர்களில் இராவணன் முக்கியமானவன். பிற் காலத்தில் தமிழில், இராவண காவியம் எழுந்தது. இராவணன் நிரம்ப படித்தவன், மாபெரும் வீரன் என்று பல சிறப்புகளுக்கு சொந்தக்காரன். ஆனால், இராவணன் வீழ்ச்சி ஏன் என்பது பற்றி தமிழ் இலக்கியங்களில் ஏற்கனவே பல கருத்துக்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.
இந்த ஆசிரியர் ஆங்கிலத்தில் நல்ல நடையில் சில புனைவுகளுடன் இராவணன் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியைநாவலாக தருகிறார். தேவர்களை வென்று பெரிய அரசை நிறுவிய இராவணன் வென்ற போதும், ‘பாவப்பட்ட அசுரர்கள் ’ ஒன்றும் பயன் அடையவில்லை என்ற ஆசிரியரின் ஆதங்க கருத்து, இதிகாசங்கள் இந்த நாட்டில்எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இந்த நூல் காட்டுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!