விலைரூ.250
புத்தகங்கள்
ARJUNA
விலைரூ.250
ஆசிரியர் : அனுஜா சந்திரமெளலி
வெளியீடு: லீட் ஸ்டார்ட் பப்ளிசிங் பி.லிட்.,
பகுதி: கதைகள்
Rating
மகாபாரத பின்னணியில் மாவீரன் அர்ஜுனனை விமர்சிக்கும் நாவல். அர்ஜுனன் குறித்த பல்வேறு கதைகளையும் சேர்த்து ஆங்கிலத்தில் உருவான படைப்பு இது. பெண் எழுத்தாளரான ஆசிரியர் சிறப்பாக அர்ஜுனனின் பல்வேறு சாகசங்களை எடுத்தியம்புகிறார்.
உண்மையில் பீமன் தான், பாண்டவர்கள் குலத்தில் அதிகம் தியாகம் செய்தவன் என்ற கருத்து உண்டு. சகோதரர்களையும், திரவுபதியையும் அரக்கு மாளிகையில் இருந்து மீட்டது உட்பட பல செயல்கள், அவனது வீரத்தைக் காட்டுவன.
ஆசிரியையும் திரவுபதியை கீசகன் அடைய விரும்பிய போது, பீமன் தண்டித்த விதத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார். அர்ஜுனன் பெற்ற வெற்றிகள், அதே சமயம் அசுவத்தாமா கணையில் பாண்டவர் பட்ட பாடு, கடைசியில் அர்ஜுனன் உயிர் விட்டசெயல் ஆகியவற்றை பாரதக் கதைகள் பாணியில் ஆங்கில வாசகர்களுக்கு படைத்திருக்கிறார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!