விலைரூ.180
புத்தகங்கள்
Rating
பக்கம்: 368
மார்க்சிய கருத்தியல், அரசியல், பொருளாதார சூழல் இவையே தனது கதைகளின் அடியோட்டம் என்றும் அவற்றிற்குத் தத்துவ ரீதியான பரிணாமம் எதுவுமில்லை என்றும் கூறும் சுகுமாரனின் 2006ம் ஆண்டின் சாகித்ய அகடமி விருது பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு.
‘பிறவி எனக்கு முதல் மறதியாக இருந்தது. இப்போது இதோ கடைசி மறதியாக மரணம் வந்து சேர்ந்துள்ளது’ என, முடியும் (57) ‘கைவிடப்பட்டவர்களின் வானம்’ தொடங்கி, கேட்க விரும்பும் ஒரு காது இருக்கும் வரை, நமது போர் முழக்கம் ஒலிக்கப்பட வேண்டும். நமக்குப் பிறகு இந்த ஆயுதங்களை எந்த ஒரு வகையாவது புதியதாக உயர வேண்டும்.
இயந்திரத் துப்பாக்கிகளின் முழக்கங்களாலும், புதிய போர் அழைப்புகளாலும், வெற்றி ஆரவாரங்களாலும் நமது மரண கீதத்திற்குச் சுருதி சேர்க்க, புதிய புதிய போராளிகள் முன்வர வேண்டும். (318) என்ற சேகுவேராவின் வசனங்களுடன் முடியும் ‘விடியலைக் காண உறக்கம் துறந்தவர்கள்’ சிறுகதை வரை ஒவ்வொன்றிலும், சிவப்புச் சிந்தனைகளே இழையோடி நிற்கின்றன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!