பல்லவர் குடைவரைகளில் சிங்கப் பெருமாள் கோவில் தொடங்கி, தான்தோன்றிமலை வரை 12, அதியர் குடைவரைகள் 2, பாண்டியர் குடைவரைகள் பிள்ளையார்பட்டி தொடங்கி பூதப்பாண்டி வரை 6, ஆக மொத்தம் 20 குடைவரைகள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழக குடைவரைகள் பற்றி, ஏற்கனவே ஆறு ஆய்வுத் தொகுதிகளை வெளியிட்டுள்ள இவ்வாய்வாளர்களின் ஏழாவது (நிறைவு) ஆய்வு நூல் இது. இந்நூலில் இடம் பெற்றுள்ள குடைவரைகளின் முகப்பு, அர்த்த மண்டபம், கருவறை, சுவர்ச் சிற்பங்கள் போன்றவற்றை 56 பக்கங்களில் வண்ணப் படங்களுடன் இணைத்துள்ளது நூலுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது.
தமிழகத்தில் கலை வரலாற்றிற்கு பெருந்தொண்டாற்றி வரும் டாக்டர் மா.ராஜமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தைச் சேர்ந்த நூலாசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது. இத்தகைய ஆய்வு நூல்களை வெளியிட்டு வரும் சேகர் பதிப்பக உரிமையாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் பாராட்டத்தக்கவர்.
பின்னலூரான்