ஆனந்த பரவசம் அடைய விரும்புவோர், இந்த நாவலைப் படிக்கலாம். வளர்பிறை, தேய்பிறையை மட்டும் பார்த்தவர்கள், பவுர்ணமி நிலவைப் பார்ப்பதைப் போன்ற பரிபூரண இலக்கிய இன்பத்தைக் கொடுக்கும் நாவல் இந்நூலின் முதல் 200 பக்கங்களைப் படிக்கும்போதே, இந்த 200 பக்கங்களில் இந்த நவீன் எவ்வளவு விஷயங்களைத் திணித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் வரும். முழு நாவலையும் படித்து முடித்ததும் சிலிர்த்துப் போவோம்!
இது ஒரு மகாபாரதம்! 1944 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில், ஆந்திர தெலுங்கானா பகுதியின் வரலாற்றை நவீன் கலை அழகுறச் சொல்லி செல்கிறார். மூல நூலின் சுவை குன்றாமல் சரளமான தமிழில் மொழி பெயர்த்திருக்கும் இளம்பாரதி பாராட்டுக்குரியவர்.
எஸ்.குரு