புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், காரைக்காலில் உள்ள இளையான்குடியில் பிறந்த அரங்கசாமி நாயக்கர், புதுச்சேரி விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரது வரலாற்றை அவரது மூத்த மருமகள் படைத்துள்ளார். அரங்கசாமி நாயக்கரின் தாத்தா காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நவாபுக்கு அஞ்சி அங்கிருந்து நடந்தே காரைக்காலுக்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார். காந்தியடிகள் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கதர் அணியத் தொடங்கிய அரங்கசாமி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தைப் புதுவையை விட்டு விரட்டப் பாடுபட்டுள்ளார்.
அரிசன மக்கள் பொதுக் குளத்தில் நீராடுவதற்கும், பொது இடங்களில் நடமாடுவதற்கும், ஆலயத்திற்குள் நுவைதற்கும் அந்தக் காலத்திலேயே பாடுபட்டுள்ளார். புதுவை வரலாற்றுடன் பிரிக்க முடியாத அரங்கசாமி நாயக்கரின் வரலாற்றை, எளிய தமிழில் அரிய ஆவணங்களுடன் வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
முகிலை ராசபாண்டியன்