சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை.
எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் ஆளுமைத்திறனும் இந்த கட்டுரைகள் வழியே நமக்கு புலப்படுகின்றன. இல்வாழ்க்கைக்கு ‘இமாலய படிப்பினை’ தரும் நற்றிணை பாடல்களின் நயம், இலக்கியம் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இல்லறம் விரும்புவோருக்கும் உதவும்.
- ஜீ.வி.ஆர்.,