‘புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, ‘சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருக்க முடியுமா?’ என்பது முடிய, 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நூலாசியர்.
ஊழ்வினையை விட ஊழல் வினையில், நம்பிக்கையில் உள்ள அன்றைய, இன்றைய அமைச்சர்களும், பிரதமர்களும் இக்கட்டுரைகளில் நிறையவே இடம்பிடித்துள்ளனர். தவிரவும், உலக முதலாளிகள், இந்தியாவிற்குள் வந்து, நம் பொருளாதாரத்தை சுரண்டும் தகவல்களும் ஏராளம். புரட்சி பூக்க வேண்டும் என்று, புத்தக பூபாள மிசைக்கும் ஆசிரியர், ‘பொன்னுலகைப் படைக்க கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, போலீசை அடக்கி, ஒடுக்கவாவது கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர வேண்டும்’ (பக்16) என்று கூறுவது சற்று நெருடலாக உள்ளது.
பின்னலூரான்