பகழிக்கூத்தர், தன்னுடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில், ‘மொழியும் சமயம் அனைத்திற்கும் முதல்வா’ என்று முருகனை அழைப்பார். அருணகிரிநாதரின் அனுபவத்தை ஆசிரியர், அம்மகான் பாடிய வார்த்தைகள் கொண்டு, ஆய்வு செய்திருக்கிறார்.
திருமுருகாற்றுப்படையில், வள்ளியுடன் நகை அமர்ந்து நின்ற முகம் பற்றி, நக்கீரர் பெருமைபடக் கூறியிருக்கிறார். வள்ளி திருமணம், உயிரானது. இறைவனுடன் இரண்டறக்கலத்தல் என்ற அடிப்படையில், அதைச் சான்றாதாரங்களுடன் விளக்குவது சிறப்பு.
பொதுவாக அருணகிரியாரின் அநுபூதிச் சிறப்பை, பலரும் அறிய முற்படும் காலமாக இது இருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர், வள்ளியை மணம்புரிந்த பெருமான் செயலை ஆன்மிகப் பார்வையில் அருளாளர்கள் வழி நின்று நிறுவுவது இந்த நூலின் சிறப்பாகும். குமரப் பெருமான் சிறப்பை தினமும் வணங்கும் அருளாளர்கள், இந்த நூலை வரவேற்பர்.
பாண்டியன்