உள் மனதில் அனைவருக்கும் நிழலாடும் காதலை, ஆசிரியர் கவிதைகளாக்கி உள்ளார். அதற்கு ஆசியாக அந்துமணி தன் முன்னுரையில், ‘காதல் என்ற இந்த மாயாஜால வார்த்தைக்கு தான் எத்தனை வீரியம்...! என்று கேள்வி எழுப்பி, ஆசிரியர் தொகுப்பு முத்தாய் அமைந்து இருக்கிறது என்கிறார்.
உதாரணமாக, ‘குடைக்கு இனி அவசியமில்லை... இடைவெளிகள் அதிகமாயின... என்ற கவிதை போதும். இது, தினமலர் வாரமலர் பகுதியில் வெளியானது. நூலின் தலைப்பில் அமைந்த கவிதையில், நேசத்தையும் பகல்வேசத்தையும் விளக்கும் கவிஞரின் கருத்தை, காதலில் மூழ்கிப்போன பலரும் எளிதாக புரிந்து கொள்வர். கவிதைப்பிரியர்களை கவரும் நூல்.